நினைவுகள்-7


பத்து வருடத்தில் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
ஒரு அமெரிக்க கணக்குப்படி:
ஒரு பேரல் ஆயில் = 200 மடங்கு உயர்வு (அதாவது பத்து வருடத்துக்குமுன் 24 டாலராக இருந்தது, இப்போது 100 டாலராக உயர்ந்துள்ளது)
அதேபோல சில:
எரிபொருள் எண்ணெய் = 250 மடங்கு.
பெட்ரோல் = 175 மடங்கு
ஒரு டஜன் முட்டை = 100 மடங்கு
ஆஸ்பத்திரி செலவு = 100 மடங்கு.
கறி (மாமிசம்) = 100 மடங்கு
திரைபட டிக்கெட் = 100 மடங்கு
காலேஜ் கட்டணம் = 70 மடங்கு.(பாங்க் லோன் கொடுப்பதால் குறைவாக உள்ளது)
மின்சார செலவு = 60 மடங்கு (இது அமெரிக்காவில்)
புது கார் = 55 மடங்கு
காப்பி = 50 மடங்கு
வீட்டு எரிவாயு (கேஸ்) = 50 மடங்கு.
போஸ்டல் ஸ்டாம்பு = 48 மடங்கு
வீட்டுவாடகை = 40 மடங்கு.
வீடு வாங்கும் விலை (சாதாரணவீடு) = 50 மடங்கு.
**
அமெரிக்காவில் 2000த்தில் ஒரு டாலர் என்பது இப்போது 1.35 டாலராக பணவீக்கம் அடைந்துள்ளதாம்.
எல்லாவற்றுக்குமே அதிக விலை கொடுக்கவேண்டும்.
இந்த விலைஏற்றத்துடன் போட்டிபோட்டு வாழ முடியாதவன் ஏழையாக உணருகிறானாம்.
**
இந்தியாவில் நிலை எப்படி உள்ளது?
இங்கு கடந்த 20 வருடமாக ஒருவித திடீர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன், மாதச் சம்பளத்தில் பெருத்த வித்தியாசம் இருந்ததில்லை. தனியார் கம்பெனிகள் கொடுக்கும் சம்பளம் குறைவே.

1990க்கு பின் உலகளாவிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறிவிட்டபின், நமது உழைப்பைக் கொடுத்து டாலரை சம்பளமாக பெறும் வழிமுறை வந்தது. வாங்கும் சக்தி பெருகியது. சம்பள வித்தியாசம் உள்நாட்டு வேலையை விட வெளிநாட்டு தொடர்புடைய வேலை செய்பவரின் வருமானம் மிதமிஞ்சி இருந்தது. ஆடம்பர பொருள்கள் இந்தியரின் வீட்டில் நுழைந்தன. 20 வருடங்களுக்கு முன் இந்தியாவில் எந்த வெளிநாடும் தனியாக உற்பத்தி கம்பெனி நடத்த முடியாமல் சட்டம் இருந்தது. அது மாறியவுடன், முதலில் கார் கம்பெனிகள் புகுந்தன. மோட்டார் வாகன கம்பெனிகள் புகுந்தன. பின், டிவி, செல்போன், வீட்டு உபயோக பொருள்கள் செய்யும் கம்பெனிகள் புகுந்தன. இவை எல்லாமே, இந்திய பொருளாதார சூழ்நிலையில், ஆடம்பர பொருள்களே. ஆனாலும் நாம் ஆடம்பர பொருள்களின் மீது காலம் காலமாக தீராத மோகத்திலேயே இருந்தவர்கள். அதை சரியாக வெளிநாட்டு வியாபார நிறுவனங்கள் உபயோகப் படுத்திக் கொண்டன. நாம், வருமானம் இல்லாவிட்டாலும், கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள் என்று ஜரோப்பிய நாடுகள் நம்மை சரியாக படம்பிடித்து வைத்துள்ளன. நம்மைத் தவிர மற்றவர்கள் சிக்கனமாக இருக்கவேண்டும் என நாம் (இந்தியர்கள்) நினைக்கிறோமாம்.

ஒரு வெளிநாட்டு வங்கித் தொழில் நடத்தும் நிறுவனங்களின் அமைப்பு, இந்தியனைப் பற்றி எடுத்த கணக்கெடுப்பு இது:
பொதுவான கருத்து:

“பொதுவாக இந்தியன் ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுவான். தனக்குத் தெரியாத தன் பேரன், அவன் வாரிசுகள் சுகமாக வாழ வழி செய்து வைப்பதற்காகவே பிறந்ததாக கருதி அவனின் வாழ்நாள் முழுவதும் உழைப்பதைத் தவிர அவனுக்கு வேறு ஏதும் தெரியாதாம். அவனின் வாழ்நாளில் அவனுக்காக வாழ மாட்டானாம். அவனின் வாழ்நாளில் ஒரு நல்ல உணவோ, உடையோ அவன் அணிந்து கொள்ள விரும்ப மாட்டானாம். ஆனாலும், அவன் குடும்பம் ஆடம்பர பொருள்களை அனுபவிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை உடையாவனாக இருப்பானாம். அந்த பொருள்களை காசு சேர்த்து வாங்கும் வரை காத்திருக்க மாட்டானாம். அது கடனாக கிடைக்கும் பட்சத்தில் வட்டி எவ்வளவு கட்டவேண்டும் என்று ஒருவார்த்தை கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் முதலில் அந்த பொருளை வாங்கி வைத்துக் கொள்வதில் அளவில்லா பெருமையும் ஆசையும் கொண்டவனாம்.”

அதனால்தான், இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் அதிக அளவில் விநியோகிக்கப்பட்டதாம்.

இந்தியாவில் பட்ஜெட் போடுவதற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும், மக்களிடம், சிக்கனத்தை வலியுறுத்தியும், சாதாரண வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கவும், மக்களை பழக்க வேண்டும். பின்வரும் காலங்களில் இந்த ஏற்ற இறக்கம் இல்லாமல் வாழ்வது சமுதாய பிரச்சனைகளை உண்டாக்காது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s