நினைவுகள்-4


Cry and Howl என்ற ஒரு பிளாக்கில் — மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் கதறலாக — அதிபர் ஒபாமாவுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் அட்டகாசத்தை இவ்வாறு தனது கடிதத்தில் வடித்துள்ளார்.

“நான், வரிகட்டிவரும், சட்டத்தை மிக மதிக்கும் ஒரு அமெரிக்க பிரஜை. எனது மகன் சார்ஜண்ட் பிராண்டன் போலீஸ் அதிகாரி. அவன், நேருக்குநேர் நடந்த கார்களின் மோதலில் கடந்த 2014 மே 12-ல் கொல்லப்பட்டான். இந்தச் செயல் ஒரு தவறுதலான ஓட்டுனரால் நடந்தது. அந்த மோசமான ஓட்டுனரோ சட்டவிரோதமாக இந்த நாட்டுக்குள் நுழைந்தவன். ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தண்டனை அனுபவித்தவன். அவனுக்கு இந்த நாட்டின் ‘சமூக பாதுகாப்பு நம்பர்’ என்னும் Social Security Number இல்லை. அவனுக்கு இந்த நாட்டில் மோட்டார் வாகனத்தை ஒட்டுவதற்குறிய லைசென்ஸ்கூட இல்லை. ஆனாலும், அவன் எப்படியோ ஒரு வாகனத்தை இங்கு வாங்கிவிட்டான். அதை அவன் பெயரில் பதிவும் செய்துவிட்டான்.

அந்த பாதகனின் செயலால், நான் என் மகனை இழந்துவிட்டேன். அந்த பாதகன் இந்த செயலை செய்தபோது, மூன்றுமடங்கு குடித்திருத்தான். அவனின் வாகனத்தை, தவறுதலான பாதைவழியே 35 மைல் தவறுதலாகவே ஓட்டிவந்திருக்கிறான்.

இவன் சட்டவிரோதமாக இங்கு வாழ்கிறான் என்பதை இந்த அரிசோனா மாநில அரசும் அறிந்திருக்கிறது. ஏற்கனவே இதற்காக 1994 ல் தண்டனையும் பெற்றிருக்கிறான். பல குற்றங்கள் அவன்மீது சுமத்தியிருந்தாலும், அரசு வக்கீலின் சலுகையான நடவடிக்கையால் அவன் விடுதலையும் பெற்றிருக்கிறான். அவன் சட்டவிரோதமாக இந்த நாட்டினில் நுழைந்திருக்கிறான் என்று மாநில அரசுக்கு நன்றாகவே தெரிந்திருந்தபோதிலும், ஏன் அவனை நாடு கடத்தவில்லை என்பது தெரியவில்லை. ஏன் அவனைப் போன்ற மற்றவர்கள்மீதும், இந்த அரசு, நடவடிக்கை எடுக்காமல் வைத்திருக்கிறது?

என் மகனைக் கொல்வதற்காகவா இந்த மாநில அரசு அவனை இந்த நாட்டில் தங்க அனுமதித்தது என்ற கோபம் எனக்கு மிக அதிகமாக வருகிறது.

என் மகனைப் பற்றி பல பத்திரிக்கைகளில் வந்த அவனின் சேவை சிறப்புகளை உங்களுக்கு அனுப்பியுள்ளேன். போலீஸ் அதிகாரிகளில் அவன் ஒரு நட்சத்திரம். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும், நல்ல நிம்மதியான வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க வேண்டும் என தன் கடமையை செய்து வந்தவன். தன்னலமற்றவன், பிறருக்கு உதவுபவன். வேலை நேரம் முடிந்தபின், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய போய்விடுவான். அவனின் சொந்த பணத்தைக் கொண்டு உதவுவான். கிறிஸ்துமஸ் சமயத்தில் குழந்தைகளைத் தத்து எடுத்து, அவனின் சொந்தபணத்தில், அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்வான்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s