பட்டினத்தடிகள்


Imageபட்டினத்தடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்):

சோழ நாட்டிலே காவிரிபூம்பட்டினத்திலே வைசியர் குலத்திலே 1200 வருஷங்களுக்கு முன்னே பிறந்து, திருவெண்காட்டு ஈசனிடத்துப் பேரன்பு கொண்டதால் இவரை ‘திருவெண்காடர்’ என்ற சிறப்புப் பெயரிலும் இவரை அழைப்பர். இவர் மரக்கல வாணிகத்தால் பெரும் பொருள் படைத்து குபேரன் போல வாழ்ந்தவர். சிவனடியார்களை கண்டுவிட்டால், அவர்களும் ‘சிவன் தான்’ என்று நினைத்தே உபசரிக்கும் பக்தி கொண்டதால் ‘சிறுத்தொண்டர்’ என்ற சிறப்பு பெயரும் கொண்டு வாழ்ந்தவர்.

ஒருநாள், ஒர் சைவர் தான் திருமணம் செய்து கொள்ளுவதற்கு போதிய பொருள்வசதி இல்லாமல் வருந்தி யோசனையில் இருந்தார். அவரிடம் சிவபிரான், ஒரு மனிதனாக உருமாறிக் கொண்டு சென்று, திருமணத்துக்கு இருந்த அந்த சைவரிடம் சென்று ‘நீ என்னை உனது அடிமையாக எண்ணிக் கொள்; என்னைக் கொண்டு சென்று யாருக்காவது விற்றால் உனக்கு தகுந்த பணம் கிடைக்கும்; அதைக் கொண்டு உன் திருமணத்தை நடத்திக் கொள்’ என்று மனித உருவில் இருந்த சிவன் கூறினார். அந்த சைவரும் அவ்வாறே, இந்த மனித உருவில் இருந்த சிவனை, அந்த வசதியான பட்டினத்தடிகளிடம் கொண்டு சென்று விற்று பொருள் பெற்றுப் கொண்டு போனார்.

பட்டினத்தடிகள், இந்த அடிமையை ஒரு அடிமையாக நினைக்காது, தன்னுடைய மகனைப் போலவே கருதி வைத்துக் கொண்டார். அவனுக்கு தன்னுடைய வணிக முறைகளை கற்றுத் தந்தார்.  அவனை மரக்கலத்திலே கடல்தாண்டி அனுப்பி பொருள் ஈட்டி வர அனுப்பினார். ஒருமுறை அந்த அடிமை தன்னுடைய மரக்கலத்தில் கொண்டுசென்ற பொருள்களை எல்லாம் விற்று அதனால் கிடைத்த பெரிய தொகையைக் கொண்டு, ஒரு தீவிலே ஆலயத் திருப்பணிக்கு தருமம் செய்துவிட்டார்; ஆனால் தனது வளர்ப்பு தகப்பனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல், திரும்பும்போது, மரக்கலம் நிரம்ப சாண-எருவை ஏற்றிக் கொண்டு வந்து, தன் தந்தையிடம், ‘நான் பொன்மணலைக் கொண்டுவந்துள்ளேன்’ என கூறி, அந்த சாண எருவின் ஒன்றை பிய்த்து நீரில் கரைத்துக் காட்டினார். ஆனால் அவனோடு சென்ற சிலர், அவனின் தந்தையான பட்டினத்தடிகளிடம் போய் இவன் உம்மை ஏமாற்றுகிறான் என கூற, அவர், அந்த அடிமையை சிறையிலிட்டு வைத்தார்.

அங்கே சிறையில் அவரிடத்தில் விளங்கிய அற்புதங்களை அறிந்த பட்டினத்தடிகளான பிள்ளையார் அவரை சிறையிலிருந்து வெளியே அனுப்பிவிட, அவர் பட்டினத்தடிகளான பிள்ளையாருக்கு ஞான உபதேசம் செய்து, காதற்ற ஊசியால் அவருக்கு ஞானம் உதிக்கச் செய்து, உடனேயே பிள்ளையார் துறவறம் கண்டார்.

அவர் பின்னர் தலங்கள் தோறும் சென்று அற்புத ஞானப் பாக்களைப் பாடி, கடைசியில் திருவொற்றியூர் அடைந்து அங்கு சமாதியானார். திருவேகமபத் திருவந்தாதி, ஒருபாவொருபது, முதலிய அநேக துதி பாடல்களான பிரபந்தங்களை பாடினார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s