நாராயணன் (விஷ்ணு)


நாராயணன்:

Image

விஷ்ணு. நாரம்=ஜலம். அதில் பிறந்ததால் நாராயணன்.

மகா பிரளயத்தில் எல்லாமும் அப்பு ரூபமாக ஒடுங்கிய பொழுது அதில் விஷ்ணு தோன்றி உலகனைத்தையும் தோற்றுவித்தார் என்பது வேதபுராணங்களின் கருத்து. இந்த நாராயணபதம் விஷ்ணுவுக்கு மாத்திரமன்று சிவனுக்கும் பெயராகச் செல்லும் என்பர்.

ஜகம் அப்புவில் ஒடுங்கிய கற்பத்தில், அதனை மீளவும் அந்த தத்துவத்தினின்று தோற்றுவித்த பரப்பிம்மத்தினது புருஷ அம்சமே நாராயணன் எனப்பட்டது. நாரம் என்பது அப்புவினது மூலப்பகுதி. அது மண்டலமிட்டு எழுந்தாடும் சர்ப்ப வடிவினை உடையதாய் இருக்கும். அதன் சக்திபாகம் சங்கினது வடிவை உடையதாய் இருக்கும். அப்புவினிடத்து விளங்கும் புருஷ அம்சம் ஆதிசேஷன் என்னும் சர்ப்பத்தைப் சாயலாகக் கொண்டு அறிதுயில் செய்யும் நாராயணனாகக் கூறப்படும். ஒடுங்காதுஎஞ்சி நின்று, மீளவும் ஜகத்துக்கு ஆதி காரணமாய் கிடந்தது அப்புவினது மூலப்பகுதி என்பதால் அஃது ஆதிசேஷன் எனப்பட்டது.

சேஷம்=எஞ்சியது. அப்புவினது மூலப்பகுதி மண்டலமிட்டு எழுந்தாடும் சர்ப்ப வடிவினதென்பது அப்புவினது அணுவை எடுத்துச் சோதித்தால் இனிது புலப்படும். அவ்வணுவானது ஸ்தூல நிலைவிட்டுச் சூக்குமித்துச் சூக்குமித்துப் போய் ஏழாவது நிலையை அடையும்போது இவ்வடிவைப் பெறும். கமல வடிவுடைய அப்புவினடத்தே பிரமாவாகிய சிருஷ்டி புருஷன் தோன்றுவான். அவையல்லாமல், அப்புவின்மூலப்பகுதியை ஆதிசேஷன் என்றும், அப்புவுக்கு குறி கமலம் என்றும், கூறிய நமது பூர்வ வேதாந்த சித்தாந்த நூலாசிரியர்களது பூத பௌதிக ஞானமும் புத்தி நுண்மையும் அநுபவமும் பெரிதும் பாரட்டப்படத்தக்கன என்பது இக்கால ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெளியிட்ட விஞ்ஞான உண்மைகளை  ஊன்றி கவனித்தால் நன்கு தெளிவாகும். 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s