வேதவதியே சீதை


வேதவதியே சீதை:

குசத்துவஜன் என்னும் முனிவரின் புத்திரி வேதவதி என்பவள். இவள் விஷ்ணுவுக்கு தேவியாக வேண்டும் என ஆவலுடன் இருந்தாள். அப்போது தம்பன் என்னும் ராக்ஷசன் இவளைத் தனக்கு மனைவியாக வேண்டும் என அவளின் தகப்பன் குசத்துவஜ முனிவரைக் கேட்டான். அவர் மறுக்க, தம்பன் கோபம் கொண்டு அந்த முனிவரை கொன்றான். அதனால் அவனுக்கு பிரமஹத்தி தோஷம் கண்டு அவனும் இறந்தான்.

பின்னர், இராவணன் இவளைக் கண்டு பலவந்தம் பண்ண, ‘பாவி! நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய். எனவே உனது வம்சத்தை அழிக்க நான் பூமியில் பிறந்து உன்னை பழிதீர்ப்பேன்’ என்று கூறி அக்கினியில் புகுந்தாள். அதன்பின்னர், அவள் இலங்கையில் ஒரு தடாகத்தில் பிறந்தாள். அவளைப் பார்த்த அரசரின் ஏவலர்கள் அந்த குழந்தையை அரசனிடம் சேர்த்தனர். ஆனால் அங்குள்ள ஜோதிடர், ‘இந்தக் குழந்தையால் இலங்கைக்கு அழிவு உண்டு’ என்று கூறியதால், அவளை ஒரு பேழையில் இட்டு கடலில் விட்டு விட்டனர். அந்த பேழை மிதந்து மிதந்து மிதிலை நாட்டு கரையை அடைந்தது. அங்கு மண்ணில் புதைந்தது. அங்குள்ள மிதிலை மன்னன் குழந்தை வேண்டி யாகம் செய்து மண்ணைக் கிளரியபோது அங்கு பேழையில் இருந்த குழந்தையை கண்டு மகளாக ஏற்று வளர்த்தார். அந்த குழந்தையே சீதை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s