தமிழில் மகாபாரதம்


தமிழில் மகாபாரதம்:

இது பாரத வம்சத்து ராஜாக்கள் சரித்திரம். இஃது இதிகாச உருபமாயுள்ளது.

இதில் சிருஷ்டி முதலிய வரலாறும் தரும சாஸ்திரங்களும் உபநிஷதப் பொருள்களும் கூறப்பட்டுள்ளது.

இது வியாசர் சொல்ல விக்கினேசுவரர் எழுதியது. இஃது ஒரு லக்ஷத்தையாயிரம் கிரந்தமுடையது.

இதனை தமிழிலே வெண்பாவாகப் பாடியவர் பெருந்தேவனார். அவருக்குப்பின் விருத்தப்பாவாற் பாடியவர் வில்லிபுத்தூரர். அதன்பின்னர், அதனை எண்ணாயிரம் விருத்தப்பாக்களை இடையிடையிட்டு விரித்துப் பாடியவர் நல்லாப்பிள்ளை.

இற்றைக்கு ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னே சந்திர வம்சத்திலே உதித்த திருதராஷ்டிரன் பிறவிக் குருடனாய் இருந்தமையால் அவன் தம்பி பாண்டு அரசனாகி, பின்னர் காடேகி, தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்னும் ஐவரைப் புத்திரராகப் பெற்றும், பின்னர் பாண்டு இறக்க,  திருதராஷ்டிரன், அவர்களுக்கு அவ்வரசில் பாதிகொடுத்து இந்திரப்பிரஸ்தம் என்னும் நகரில் இருக்க, திருதராஷ்டிரன் புத்திரர் நூற்றுவருள் மூத்தோனாகிய துரியோதனன் பாண்டவர்களுடைய அரசைச் சூதினாலே கவர்ந்து கொண்டு அவர்களைக் காடேற்றச் செய்ததோடு, அவர்கள் மனைவி திரௌபதியை துகிலுரித்து மானபங்கஞ் செய்தும், அது கண்ட வீஷ்மர் தடுத்தும் கேளாது, ‘பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் செய்து வந்தால்’ நாடு தருவதாகச் சொல்ல, அவ்வாறே பாண்டவர்கள் மீண்டு வந்து, கிருஷ்ணனைத் தூது அனுப்பிக் கேட்டும் துரியோதனன் மறுத்ததால், குருக்ஷேத்திரத்தில் பதினெட்டு நாள் போரிட்டு, துரியோதனாதியாரை நிர்மூலமாக்கி, வெற்றிபுனைந்து அரசு பெற்றுச் செங்கோலொச்சிய சரித்திரமே பாரதமாகும்.

பாரதம் பாடிய பெருந்தேவனார்:

இவர் தமிழிலே பாரதக் கதையை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இயற்றிய ஆசிரியர்.

இவர் நாடு தொண்டைநாடு. இவர் ஜாதியில் வேளாளர்.

நற்றிணை, கலித்தொகை, புறநானூறு முதலிய நூல்களிலுள்ள கடவுள் வாழ்த்துக்களும் இவராற் பாடப்பட்டன.

கடைச்சங்க புலவருள்ளே பெயர் படைத்தவர்களுள் இவருமொருவர்.

புறநானூற்றுக்கு கடவுள் வாழ்த்தாக இவர் செய்த, “கண்ணினார் நறுங்கொன்றை . … . .” இச்செய்யுளிலே, ‘பெண்ணுரு ஒரு திறனாகின்ற உரு, தன்னுள் அடக்கி, கரக்கினும் கரக்கும், எனவரும் அடிகளால், சிருஷ்டியின் பொருட்டு தமது சக்தியை ஒரு பாலாகத் தோற்றுவித்து பின்னர் உலகை ஒடுக்கும் காலத்திலே தமது சக்தியைத் தம்முள்ளே மறைத்துக் கொள்வாரென்பதாக விளக்கியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s