தனக்கு மிஞ்சியே தானம்


முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி

பாரி என்று ஒரு சிற்றரசன். ஆனால் இவனோ குணத்தில் பேரரசன். கொடுப்பதில் குபேரன். இவன் கொடைக்கு சிறந்தவன் என்பதால் இன்றும் இவனைத்தான் உதாரணமாகக் எல்லா கவிகளும், பேச்சாளர்களும் புகழ்ந்து நினைவு கொள்வர்.

ஆனால், ஊர் பெருமைதான் கிடைத்ததே ஒழிய இவனின் மகள்கள் பட்டபாடு இவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், கொடையே கொடுத்திருக்க மாட்டானோ என்னவோ!

இவன் சிற்றரசனாக இருக்கும் போது, தன் கையை மீறி இவ்வளவு கொடைகளைக் கொடுப்பது எப்போதும் ஆபத்துத்தான் போலும். இவனின் கொடையைக் கண்டு பொறாமை கொண்ட சேர, சோழ. பாண்டிய மன்னர்கள் இவன் மீது படையெடுத்து அவனை போரில் கொன்றனர். கொடைக்குக் கிடைத்த பரிசு போலும்!

அவனுக்கு இரண்டு மகள்கள் அப்போது திருமணவயதில் இருந்தனர். ஆனால் அந்த பெண்களை காப்பாற்ற எவருமே முன்வரவில்லையாம். ஒருவேளை பேரரசுகளுக்கு பயந்து கொண்டு, மனமிருந்தும் முன்வர மனமில்லை போலும்.

ஆனால் இறந்த பாரி மன்னனின் நண்பன் அவ்வாறு பாராமுகமாக இருக்கமுடியவில்லை. நட்பு ஓடோடி வந்தது. பாரியின் மிகநெருங்கிய நண்பர் ‘கபிலர்’. பாரி உயிருடன் இருந்த காலத்தில் நண்பர் கபிலருக்கு அநேக உதவிகள் செய்திருந்தார். கபிலரும் நன்றி மறக்கவில்லை. பாரியின் இரண்டு மகள்களும் அரச வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று அனாதை. அவர்களை காக்க கபிலர் வந்து சேர்ந்தார். அவரோ ஏழை கவிஞர் (கடைசங்க காலத்து கவிஞர் கபிலர்). அந்த இரண்டு மகள்களையும் தம் மகளாகவே ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி வைக்க நினைத்து, ஒவ்வொரு சிற்றரசர்களிடமும் போய் இந்தப் பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள் என்று உருக்கத்துடன் கெஞ்சுகிறார். அண்டைநாட்டு மாமன்னர்கள் கோபத்துக்கு ஆளாக விரும்பாத அந்த சிற்றரசர்கள் அந்தப் பெண்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர்.

கபிலரோ எங்கு சுற்றித் திரிந்தும் அந்தப் பெண்களுக்கு தகுந்த மணமகன்களை தேர்வு செய்ய முடியவில்லை. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற கடைசி முடிவாக, இந்த க்ஷத்திரிய பெண்களுக்கு க்ஷத்திரிய மணமகன்கள் இல்லையென்றால் என்ன குடியா முழுகிவிடப் போகிறது. கபிலர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டார். ஒரு அந்தண வாலிபர்களை அணுகி அவர்களுக்கே மணம் முடித்து தன் நண்பின் பண்பே உயர்த்திக் கொள்கிறார்.

கொடை சிறந்ததா? இல்லை பாத்திரம் அறிந்த கொடை சிறந்ததா? இல்லை தனக்கு மிஞ்சியே தானமா?

ஒருவரின் கொடைத் தன்மையோ, பொருளாதார வளர்ச்சியோ பகையாளிகளை கண்டிப்பாக உருவாக்கும். பலம் பொருந்தியவன் மட்டுமே பணம் வைத்திருக்க முடியும். கோயிலின் உச்சியைத் தாண்டி ஒருவனும் குடியிருக்க முடியாதுதான் போலும்!

Advertisements

3 thoughts on “தனக்கு மிஞ்சியே தானம்

  1. Nice reading about you

    Thanks for visiting my blog. Be in touch. Browse through the category sections, I feel you may find something of your interest.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s