சப்பணம் போட்டு உட்காந்திரு

அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதைப் பற்றி நாம் அதிகமாகக் கவலைப் படுகிறோம்.
நம் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வாழ்க்கை அமையா விட்டால் அதுவே நமக்குப் பெரும் கவலையாகி விடுகிறது.
நமக்கு முன்னால் வாழ்ந்து சென்றவர்கள் எல்லாம் வாழ்ந்த வாழ்க்கை ஒரே சீராக இருந்ததால், நமக்கு அதுபோலவே ஒரே சீராக இருக்கவேண்டும் என நினைக்கிறோம். அதில் சிறிது மாற்றம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
விருப்பம்போல வாழ்க்கை என்பது எந்த ஊரிலும் இல்லை. ஒரு சிலருக்கு விதிவசத்தால் அவ்வாறு ஏற்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலானவர்கள், வந்த வாழ்க்கையை மட்டுமே எதிர் கொள்கிறார்கள். அவர்களால் வாழ்க்கையை உருவாக்க முடியவில்லை. இயல்பை அனுசரித்து வாழ்ந்து வருகிறார்கள்.
நாம் பூமியில் ஒரு இடத்தில் இருக்கிறோம். அந்த பூமி நம்மை தூக்கிக் கொண்டு சுற்றிவருகிறது. தனக்குத்தானே சுற்றினாலும், சூரியனையும் சுற்றுகிறதாம்.
ஆனால் அந்தச் சூரியன் சும்மா இல்லை. அது ஏதோ இந்த பிரபசஞ்சத்தைச் சுற்றுகிறதாம். ஆக நம் பூமி, சூரியனுடன் சேர்ந்து வேறு எங்கு சென்று கொண்டிருக்கிறது. அது எங்கு போகிறது என்று யாருக்கும் தெரியாது. காலங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வினாடியில் நாம் இருந்த இடத்தில் அடுத்த வினாடியில் நாமும் இல்லை, நம் பூமியும் இல்லை, நம் சூரியனும் இல்லை.
அப்படி இருக்கும் போது, இவை எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டுதிரியும் பிரபஞ்சம் மட்டும் என்ன சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டா இருக்கும்? நிச்சயம் அதுவும் எங்காவது சுற்றிக் கொண்டேதானே இருக்கும்?
எதுக்கு இதைப் பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் விரும்பும்படியான வாழ்க்கையை நாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழவேண்டாம். அந்த வாழ்க்கை எப்படி வந்தபோதும் அந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் எதிர்பார்த்தே இருப்போம்.

Advertisements

மனக்குதிரை

இருப்பதிலேயே மனசுதான் ரொம்ப வேகமானது என்கிறார்கள்.

அடக்கவும் முடியாத குதிரையும் அதுதானாம்.

நாம் அந்த மனதை அடக்க மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது.

தேவை இருக்கும்போது அது அடங்க மறுக்கும்.

எனவே முன் கூட்டியே அதற்கு டிரெயினிங் கொடுத்திருக்க வேண்டும்.

சும்மா இருக்கும்போது, அதை ஓடவிட்டு வேடிக்கை காட்டி, திருப்பி கூட்டிக் கொண்டு வரவேண்டும்.

அது எங்கு ஓடுகிறது என்று அதன் கூடவே சென்று அந்த இடத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், மனசு ஓடி ஒழிந்த இடத்தை பின்னாளில் நாம் கண்டுபிடித்து கூட்டிக் கொண்டு வரமுடியும்.

நம்ம கூடவே வைத்துக் கொள்ளும் மனசுக்கு வலிமை அதிகம். ஓடிப்போன மனசு ஒரு காட்டுமிராண்டி தான். அதற்கு நாகரீகம் தெரியாது. நாசூக்கு தெரியாது. அடங்கவும் தெரியாது.

தினமும் ஒருசிறிது நேரம் அந்த மனதுடன் பேசுவோம். அது என்ன சொல்கிறது என்று கேட்போம்.

அது எங்கு செல்ல ஆசைப்படுகிறது என்று போய் பார்ப்போம். அது நல்ல இடமாக இருந்தால் அங்கு போய்வரட்டும், சரியில்லாத இடமாக இருந்தால், மறுநாளிலிருந்து அதை கட்டுப்படுத்தி வைக்கலாம்.

நம் மனசை ‘உபயோகமில்லாததாக’ ஆக்கி விடவேண்டாம். அவனைக் கொண்டே நமது மீதி வாழ்க்கை உள்ளது.

நாட்கணக்கு

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களை நாம் வருடத்தில்தான் கணக்கிட்டு வைத்திருக்கிறோம்.

நாட்கணக்காக வைத்திருக்கவில்லை.

குறைந்தபட்சம் 25,000 நாட்களாகவது வாழ்ந்தால்தான் அது ஒரு நிறைவான வாழ்வாக இருக்கும்.

25,000 நாட்கள் என்பது எண்ணிக்கைப்படி குறைவுதான். (சுமார் 68 வருடங்கள் மட்டுமே).

பத்துவருட வாழ்க்கை வெறும் 3500 நாட்களுக்குள் ஓடிவிடுகிறது.

நீங்கள் எத்தனை ஆயிரம் நாட்களைத் தாண்டி இருக்கிறீர்கள்?

நாம் இன்று எத்தனையாவது நாளில் இருக்கிறோம் என்று கணக்கிட்டுக் கொள்ளவும். அந்த 25,000த்தை தொட இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்றும், நமது வாழ்க்கைப் பயணத்துக்கு  அது போதுமா என்றும், அதற்குள் எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடுமா என்றும் கணக்கிட்டுக் கொண்டு வாழுத் தொடங்குவோம்.

இது ஒரு விளையாட்டுக் கணக்குத்தான்!

சனிப்பெயர்ச்சி

சனிப் பெயர்ச்சி
ஏதோ, சனி பகவான் இந்த வீட்டிலிருந்து அந்த வீட்டுக்குப் போய் விட்டாராம். இனி எல்லாமே நல்லதே நடக்குமாம்.
மனிதவாழ்க்கை முழுவதுமே அவர் நம் கூடவேதான் இருப்பார். பிறந்தது முதல், நம்மைக் கடைசியாகக் கூட்டிக் கொண்டு போகும்வரை, இவர் நம்முடனேயே இருப்பார். அப்படியானால், அவர் எந்த வீட்டிலிருந்து எந்த வீட்டுக்கு போனால் நமக்கென்ன? நம்மை விட்டுப் போகமாட்டார் என்பது மட்டும் உண்மை.
அவரை நல்லவர் என்றே நாம் நினைத்துக் கொள்வோம். எதற்கு அவரிடம் பகைமை காட்டவேண்டும்?

இந்த சனிபகவானை இந்திய ஜோதிடக்கலை ஏற்கனவே அறிந்து கொண்டு விட்டதாம். வெகுகாலம் கழித்து கலிலியோ என்ற விஞ்ஞானி தனது தொலைநோக்கி மூலம் அதை தன் கண்ணால் பார்த்து அது இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். இதைச் சுற்றி வளையம் இருக்கிறது என்று டச்சு விஞ்ஞானி ஹியூசின்ஸ் கண்டு கொண்டார்.

குரு கிரகம் (வியாழன்) காட்டிலும் பெரிது இந்த சனிகிரகம். இதன் குறுக்களவு 75,000 மைல்.
இவர் தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 10 மணி நேரம் எடுத்துக் கொள்வார். (சரியாக 10 மணி 14 நிமிடம்).
சனி கிரகம் சுற்றும் வேகமானது ஒரு செகண்டுக்கு கிட்டத்தட்ட 10 கி.மீ.

இதே வேகத்தில் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 29 வருடம் 166 நாட்களாம். இந்திய ஜாதகக் கணக்குப்படி ஒரு வீட்டில் இவர் இரண்டரை வருடம் வீதம் மொத்தம் 30 வருடங்கள் இருப்பார் என்பர். இதில் முழுக்க வாயுக்களே இருக்கின்றன. தூசிகளே இதைச் சுற்றியுள்ள அழகான வளையங்கள்.
இந்த கிரகத்தில் உள்ள வாயுக்கள் பூமியில் உள்ள மனிதனை எப்படிப் பாதிக்கிறது என்றும் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்றும் ஜோதிடம் கூறுகிறது. இதை தெளிவாகச் சொல்லியுள்ள போதிலும், ஜோதிடர்கள் அதை விஞ்ஞான பூர்வமாக விளக்காமல், ஜோதிட பூர்வமாக விளக்கியதால் கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது.
தெளிவானவர்கள் இதை விஞ்ஞானபூர்வமாக விளக்கினால், அதன் அரிய பல உண்மைகளையும் சேர்த்து தெரிந்து கொள்ளலாம்.

நினைவுகள்-39

என் எதிரி:

எத்தனையோ மனிதர்களை பிறக்கவைத்து, மனித வாழ்வின் உன்னதத்தையும், கேவலத்தையும் சந்திக்க வைத்திருக்கிறான் இறைவன். இவன் உயிர்களின் ஆன்மா மூலம், தான்  விரும்பியதைச் செய்து கொள்கிறான் போலும்! அப்படியென்றால், ஆன்மா இவனின் ஏஜெண்ட் போல! வேறு ஒருவனுக்கு ஏஜெண்டாக இருந்து கொண்டு, நமக்கு ஏதும் ஆதரவாக ஆன்மாவால் செய்யமுடியாது போல! ஆக, நம்மில் வேறு ஒருவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆன்மா வேறு ஒருவனின் சொத்து என்றால், நமக்கு நம் உடலும், மனமும் மட்டுமே சொந்தமா? அவை இரண்டும்கூட, பலசமயங்களில், ஆன்மாவின் கட்டளைப்படியே இருப்பதாகப் படுகிறது. ஆன்மா என்னும் எதிரியுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? வேறு வழியில்லையா? ஆன்மாவின் தயவு இல்லாமல் நம்மால் இயங்க முடியாதா? ஆன்மாவிடம் நாம் சரண்டைந்துவிட வேண்டுமா?  இயங்க முடியும் என்றால், நாம் நினைத்த அனைத்தையும் நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? பெரும்பாலான மனிதர், தான் தோற்றபின், விதியை நோவதேன்?  ஆக, நம் உடல், மனம், உயிர், ஆன்மா இவைகள் நம் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நாம் இயக்காத ஒரு பொருள், வேறு யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? யாரோ ஒருவருக்காக இயங்கும் இந்த இயக்கத்தை, நான் ஏன் வாழவேண்டும்? நான் ஏன் சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டும்? நான் ஏன் துயரப் பட்டுக் கொள்ள வேண்டும்? எவனோ ஒருவனின் சந்தோஷம், துக்கம் இது! அப்படித்தானே! எனவே என்னை அது ஒன்றும் செய்துவிட முடியாது! இல்லையே, அது என்னைப் பாதிக்கிறதே! நான் செய்யாத செயல் என்னைப் பாதிக்கிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆம், ஆன்மா என்ற என் எதிரியின் செயல் என்னைப் பாதிக்கத்தான் செய்கிறது.

இதற்கு ஒரே வழி, என் எதிரியை அடக்கிவிடுவது ஒன்றே! முடியுமா? அவன் வழியில் போய்விட்டு, நான் அடக்கி விட்டேன் என்று மார்தட்டிக் கொள்ளமுடியாது. உண்மையில் என் எதிரியை என் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வேறு ஒருவனின் கட்டுப்பாட்டில் நடந்து வரும் என் எதிரி, என் வழிக்கு எப்படி வருவான்? இல்லையில்லை, அவன் என் உடலில் வசிக்கிறான். என் உயிரில் மூச்சை விடுகிறான். என் மனதில் சிந்திக்கிறான். என்னிடமே வசிப்பவனை நான் கட்டுப்படுத்த முடியாதா? ஏன் முடியாது. என் மனம், உடல், உயிரைக் கட்டுப்படுத்தினால், என் எதிரி அடங்கத்தானே வேண்டும். எப்படியும் ஜெயித்து விடுகிறேன். அவனா? நானா? பார்த்துவிடலாம்!

.

நூல் நான்கு – நீலம் – 1

திருப்பல்லாண்டு

’உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.

‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்.

சோலைக்குள் பல்லாயிரம் பறவைச்சிறகுகள் முதல்துடிப்பைப் பெற்றன. பல்லாயிரம் சிறுமணிவிழிகளில் இமைகள் கீழிறங்கி பிறக்கவிருக்கும் ஒளியை கண்டுகொண்டன. சிறகசைவில் கிளையசைய மலர்ப்பொடிகள் தளிர்களில் உதிர்ந்தன. ‘இங்குளாய்! அங்குளாய்! எங்குளாய் எந்தாய்?’ என்றுரைத்தது மணிக்கழுத்து மரகதப்புறாத் தொகை.

‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்!  கருநீலத் தழல்மணியே!’ என்றது நாகணவாய்க்கூட்டம். சோலையின் மேல் விரிந்த வானில் மேகங்கள் நாணத்தின் ஒளி கொண்டன. உச்சிமரங்களின் நுனித்தளிர்கள் முதல் அமுதத்துளி உண்டு ததும்பி முறுக்கவிழ்ந்தன. பறவைச்சிறகுகள் தாங்கள் மேகங்களால் ஆனவை என்றறிந்து கொள்ளும் பெருங்கணம்.

‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன. சொடுக்கிய நீள்கழுத்துக்களில் மின்னிமறைந்த பசுநீல மணிவெளிச்சம் அக்காட்சியை தான் அறிந்திருந்தது.

‘இதுவே நீ! இவையே நீ’ என்றது நீலமணிக்குருவி..குருத்துகளில் இருந்து தண்ணொளி இலைகளுக்குச் சொட்டி பரவித் ததும்பி வழிந்தது…

View original post 524 more words